< Back
கிரிக்கெட்
yesterday ipl match pbksvsrr tamil highlights

image courtesy: AFP

கிரிக்கெட்

பஞ்சாப்புக்கு எதிராக ராஜஸ்தான் தோல்வி: வரலாறு படைத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

தினத்தந்தி
|
16 May 2024 3:35 PM IST

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் தோல்வியடைந்தது.

கவுகாத்தி,

அனல் பறக்க நடந்து வரும் 17-வது ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோல்வியடைந்தது. ராஜஸ்தான் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டதால் இந்த தோல்வி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

இருப்பினும் ராஜஸ்தான் அணியின் இந்த தோல்வி கொல்கத்தா நைட் ரைடர்சுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதாவது 19 புள்ளிகள் பெற்றுள்ள கொல்கத்தா நடப்பு ஐ.பி.எல். சீசனில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்துள்ளது.

முன்னதாக 16 புள்ளிகள் பெற்றுள்ள ராஜஸ்தான், ஒருவேளை நேற்றைய போட்டியில் தோல்வியடையாமல், தனது கடைசி லீக் ஆட்டத்திலும் வெற்றி பெற்றிருந்தால் 20 புள்ளிகள் பெற்றிருக்க கூடும் இருப்பினும் இனி அதற்கு வாய்ப்பில்லை என்பதால் கொல்கத்தா அணியே புள்ளி பட்டியலில் முதலிடத்துடன் பிளே ஆப் சுற்றில் களமிறங்க உள்ளது. இதன் மூலம் 17 ஆண்டு கால ஐ.பி.எல்.தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் முறையாக புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து வரலாறு படைத்துள்ளது.

2-வது இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையே போட்டி காணப்படுகிறது.

மேலும் செய்திகள்