< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
இந்தியா - நியூசி. 2வது டி20 போட்டியின் போது மழை குறுக்கிட வாய்ப்பு...
|20 Nov 2022 9:01 AM IST
இந்தப் போட்டியும் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
மவுண்ட் மாங்கனுயி,
இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி, மவுண்ட் மாங்கனுயி நகரில் இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி நண்பகல் 12 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாக உள்ளது.
முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இந்தப் போட்டியும் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.