இந்தியா யு-19 அணியில் ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் சேர்ப்பு
|ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 19-வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
ஆஸ்திரேலிய 19-வயதுக்குட்பட்டோருக்கான (யு-19) கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய 19-வயதுக்குட்பட்டோருக்கான அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (4 நாட்கள்) தொடர்களில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வரும் செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான இந்திய ஒருநாள் அணிக்கு முகமது அமன் கேப்டனாகவும், டெஸ்ட் அணிக்கு சோஹம் பட்வர்தன் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 2 அணிகளிலும் இந்திய அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி விவரம் பின்வருமாறு:-
ஒருநாள் அணி: ருத்ரா படேல், சாஹில் பராக், கார்த்திகேயா கேபி, முகமது அமான் (கேப்டன்), கிரண் சோர்மலே, அபிக்யான் குண்டு, ஹர்வன்ஷ் சிங் பங்கலியா, சமித் டிராவிட், யுதாஜித் குஹா, சமர்த் என், நிகில் குமார், சேத்தன் ஷர்மா, ஹர்திக் ராஜ், , ரோகித் ரஜாவத், முகமது எனான்
டெஸ்ட் அணி: வைபவ் சூர்யவன்ஷி, நித்யா பாண்டியா, விஹான் மல்ஹோத்ரா, சோஹம் பட்வர்தன் (கேப்டன்), கார்த்திகேயா கேபி, சமித் டிராவிட், அபிக்யான் குண்டு, ஹர்வன்ஷ் சிங் பங்கலியா, சேத்தன் சர்மா, சமர்த் என், ஆதித்யா ராவத், நிகில் குமார், ஆதித்யா சிங், அன்மோல்ஜீத் சிங், முகமது எனான்