இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் ரஹானே ? - வெளியான தகவல்
|உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணிக்கு பரிசீலிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, வரும் ஜூன் 7 ஆம் தேதி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் தொடங்கவுள்ளது.
இதனையொட்டி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்டும் அணியின் பிற பயிற்சியாளர்களும், விவிஎஸ் லட்சுமண் தலைமையிலான தேசிய கிரிக்கெட் அகடாமி குழுவினரை சந்தித்து, இந்திய டெஸ்ட் அணி குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ரிஷப் பண்ட் , ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வருவதால், ரஹானேவின் பெயர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணிக்கு பரிசீலிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ரஹானே 19 பந்துகளில் அரைசதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
ரஹானேவுக்கு அடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் ராசி https://t.co/UTrWVF4IWf#csk #ipl2023 #rahane #msdhoni #chennaisuperkings #thanthitv
— Thanthi TV (@ThanthiTV) April 11, 2023