< Back
கிரிக்கெட்
வெஸ்ட்இண்டீஸ் தொடர் முடிந்ததும் கவுண்டி கிரிக்கெட்டில் ஆடுகிறார் ரஹானே
கிரிக்கெட்

வெஸ்ட்இண்டீஸ் தொடர் முடிந்ததும் கவுண்டி கிரிக்கெட்டில் ஆடுகிறார் ரஹானே

தினத்தந்தி
|
19 Jun 2023 5:33 AM IST

செப்டம்பரில் 4 கவுண்டி ஆட்டங்களில் விளையாட வாய்ப்பு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

புதுடெல்லி,

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் அஜிங்யா ரஹானே ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷைர் கவுண்டி அணிக்காக விளையாட உள்ளார். ஐ.பி.எல். முடிந்த உடனே கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட இருந்தார்.

ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணிக்கு தேர்வானதால் உடனடியாக லீசெஸ்டர்ஷைருடன் இணைய முடியவில்லை. அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசில் நடக்கும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி முடித்து விட்டு அங்கிருந்து நேரடியாக இங்கிலாந்துக்கு செல்கிறார்.

அங்கு ஆகஸ்டு மாதம் லண்டன் ராயல் கோப்பை போட்டியில் விளையாடும் ரஹானே செப்டம்பரில் 4 கவுண்டி ஆட்டங்களில் விளையாட வாய்ப்பு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இதே போல் அங்குள்ள சஸ்செக்ஸ் கவுண்டி அணிக்காக ஆடும் மற்றொரு இந்திய வீரர் புஜாரா மீண்டும் அந்த அணிக்கு திரும்புகிறார்.

மேலும் செய்திகள்