நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் இனவெறி சர்ச்சை - ராஸ் டெய்லர் பரபரப்பு குற்றச்சாட்டு
|நியூசிலாந்தின் ஜாம்பவானான இவர் ப்ளாக் & வைட் என்ற தன்னுடைய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
நியூசிலாந்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் ராஸ் டைலர் கடந்த 2006 முதல் சர்வதேச அளவில் 3 வகையான கிரிக்கெட்டிலும் தனது அபார பேட்டிங் திறமையால் ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் நியூசிலாந்து அணியின் வீரர் ராஸ் டெய்லர்.டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 மூன்று கிரிக்கெட் பார்மட்டுகளிலும் நியூசிலாந்து அணிக்காக மொத்தம் 450 போட்டிகளில் விளையாடியுள்ளார்.அணியின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளில் ஓர் அங்கமாக இருந்தவர்.
பொதுவாக நிறைய நட்சத்திர விளையாட்டு வீரர்கள் ஓய்வு பெற்ற பின் தங்களது வாழ்க்கையை பற்றிய சுய சரிதையை புத்தகமாக வெளியிடுவார்கள். அந்த வகையில் நியூசிலாந்தின் ஜாம்பவானான இவர் ப்ளாக் & வைட் என்ற தன்னுடைய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தப் புத்தகத்தை வெளியிட்ட நிகழ்வில் பேசிய அவர் நியூசிலாந்துக்காக விளையாடும் போது பெரும்பாலும் வெள்ளை வீரர்களைக் கொண்ட தனது அணியில் தாம் மட்டும் மாநிறத்தை கொண்டவராக விளையாடியதால் நிறைய தருணங்களில் கிண்டல்களுக்கு உள்ளானதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நியூசிலாந்தில் கிரிக்கெட் என்பது வெள்ளையாக இருப்பவர்களுக்கான விளையாட்டாகும். எனது வாழ்நாளில் விளையாடிய பெரும்பாலான போட்டிகளில் வெண்ணிலாவை போன்ற வெள்ளை நிற வரிசையில் ஒரு மாநிறம் நிறைந்த பழுப்புநிற முகமாக இருந்ததால் பல சவால்கள் இருந்தன.
. பல தருணங்களில் எங்களது உடைமாற்றும் அறையில் அந்த நிகழ்வு அரகேறியுள்ளது. ஒரு சக அணி வீரர் எப்போதும் என்னிடம் ராஸ் நீங்கள் பாதி நல்ல மனிதர் ஆனால் எந்த பாதி நல்லது? என்று கூறுவார். இங்கு நான் எதை குறிப்பிடுகிறேன் என்று உங்களுக்கு தெரியாது.
மற்ற வீரர்களும் தங்கள் இனத்தைப் பற்றிய கருத்துக்களை கூற வேண்டியிருந்தது. எல்லா நிகழ்வுகளிலும் வெள்ளை நியூசிலாந்து வீரர்களிடம் அந்த வகையான கருத்துக்களைக் கேட்கும் போது இது கொஞ்சம் கேலிக்குரியது போல என்று நினைத்துக் கொள்வேன். இருப்பினும் நிறைய தருணங்களில் இது நட்புரீதியான கருத்துக்கள் என அவ்வாறு கேலி செய்யும் நபர்கள் கூறுவதால் பொதுமக்களிடம் இதைப்பற்றி அந்த பாதிப்புக்குள்ளாகும் நியூசிலாந்து வீரர்கள் கூறுவதில்லை.