சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச்சு தேர்வு
|ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் - சென்னை அணிகள் மோதுகின்றன.
தர்மசாலா,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் தர்மசாலாவில் உள்ள இமாச்சலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் மாலை நடைபெறும் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கர்ரண் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி சென்னை முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு:-
சென்னை: ரகானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி , மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்கூர், ரிச்சர்ட் க்ளீசன், துஷார் தேஷ்பாண்டே.
பஞ்சாப்: ஜானி பேர்ஸ்டோவ், ரிலீ ரோசோவ், ஷசாங்க் சிங், சாம் கர்ரண்(கேப்டன்), ஜிதேஷ் சர்மா, அசுதோஷ் சர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ராகுல் சஹார், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்