பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு
|டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் பந்துவீச்சை தேர்வு செய்தார்
தர்மசாலா,
17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 57 லீக் ஆட்டங்கள் முடிவடைந்து இருக்கின்றன. இன்னும் 13 ஆட்டங்களே மீதமுள்ளன. இருப்பினும் அதிகாரபூர்வமாக எந்தவொரு அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை. கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் அடுத்த சுற்றை நெருங்கி விட்டன. இந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் 58-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் , டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி , பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
பெங்களூரு :
விராட் கோலி, பாப் டு பிளெசிஸ்(கேப்டன்), வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், மஹிபால் லோம்ரோர், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக்(w), ஸ்வப்னில் சிங், கர்ன் சர்மா, முகமது சிராஜ், லாக்கி பெர்குசன்.
பஞ்சாப் கிங்ஸ் :
ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங், ரிலீ ரோசோவ், ஷஷாங்க் சிங், சாம் குர்ரன்(கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், அசுதோஷ் சர்மா, ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், வித்வத் கவேரப்பா.