ஐதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு
|ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் முதலாவது ஆட்டத்தில் ஐதராபாத் - பஞ்சாப் அணிகள் விளையாடுகின்றன.
ஐதராபாத்,
10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். தொடரில் லீக் சுற்று இன்றுடன் முடிவடைய உள்ளது.
இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் முதலாவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஜித்தேஷ் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி ஐதராபாத் முதலில் பந்துவீச உள்ளது.
இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு:-
ஐதராபாத்: அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி, ராகுல் திரிபாதி, ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், ஷபாஸ் அகமது, சன்வீர் சிங், கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், விஜயகாந்த் வியாஸ்காந்த், நடராஜன்
பஞ்சாப்: பிரப்சிம்ரன் சிங், அதர்வா டைடே, ரிலீ ரோசோவ், ஷஷாங்க் சிங், ஜிதேஷ் சர்மா (கேப்டன்), அசுதோஷ் சர்மா, சிவம் சிங், ஹர்ப்ரீத் பிரார், ரிஷி தவான், ஹர்ஷல் படேல், ராகுல் சஹார்