< Back
கிரிக்கெட்
அவர்களின் வார்த்தைகளை நம்பாதீர்கள்- பிசிசிஐ-ஐ மறைமுகமாக சாடிய பிரித்வி ஷா.. சர்ச்சையான இன்ஸ்டா பதிவு

Image Courtesy: PTI 

கிரிக்கெட்

"அவர்களின் வார்த்தைகளை நம்பாதீர்கள்"- பிசிசிஐ-ஐ மறைமுகமாக சாடிய பிரித்வி ஷா.. சர்ச்சையான இன்ஸ்டா பதிவு

தினத்தந்தி
|
3 Oct 2022 8:23 PM IST

தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படாததற்கு, இளம் வீரர் பிரித்வி ஷா அதிருப்தி தெரிவித்து உள்ளார்.

மும்பை,

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் , ருதுராஜ் கெய்க்வாட், கில், ரஜத் படிதார், ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் , ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகேஷ் குமார் , அவேஷ் கான், முகமட். சிராஜ், தீபக் சாஹர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படாததற்கு, இளம் வீரர் பிரித்வி ஷா அதிருப்தி தெரிவித்து உள்ளார். பிசிசிஐ-ஐ மறைமுகமாக விமர்சித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள பிரித்விஷா, அவர்களின் வார்த்தைகளை நம்பாதீர்கள் என்றும், அவர்களின் செயல்பாடுகளை நம்புங்கள் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.


வார்த்தைகள் ஏன் அர்த்தமற்றவை என்பதை செயல்பாடுகள் நிரூபிக்கும் என்றும் பிரித்வி ஷா தனது பதிவில் தெரிவித்து உள்ளார். அவரின் இந்த பதிவு கிரிக்கெட் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்