ஜடேஜாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
|டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ஜடேஜாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. கோப்பையை வென்ற நிலையில் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ஜடேஜாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நீங்கள் (ஜடேஜா)ஆல்-ரவுண்டராக சிறப்பாக செயல்பட்டுள்ளீர்கள். உங்களின் ஸ்டைலான ஆட்டம், ஸ்பின் மற்றும் சிறப்பான பீல்டிங்கை கிரிக்கெட் ரசிகர்கள் போற்றுகிறார்கள் .டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடியதற்கு நன்றி. உங்கள் முயற்சிகள் தொடர என் வாழ்த்துக்கள். என தெரிவித்துள்ளார். முன்னதாக இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.