< Back
கிரிக்கெட்
ஆசிய கோப்பையை வென்ற இலங்கை அணிக்கு அந்நாட்டு அதிபர் வாழ்த்து
கிரிக்கெட்

ஆசிய கோப்பையை வென்ற இலங்கை அணிக்கு அந்நாட்டு அதிபர் வாழ்த்து

தினத்தந்தி
|
12 Sept 2022 8:53 AM IST

இலங்கையின் நற்பெயரை சர்வதேச அரங்கில் மீண்டும் உயர்த்தியுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

துபாய்,

ஆசியக் கோப்பையை வென்றதன் மூலம் இலங்கையின் நற்பெயரை சர்வதேச அரங்கில் மீண்டும் உயர்த்தியுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் அனைத்து உறுப்பினர்களின் ஒற்றுமை மற்றும் மகத்தான அர்ப்பணிப்பால் இந்த சாதனை உருவானதாக கூறியுள்ள அவர், இந்த வெற்றிக்கு வித்திட்ட அர்ப்பணிப்புள்ள பயிற்சியாளர்கள், நிர்வாகத்திற்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொள்ளும் சவாலான சூழ்நிலையிலும், ஒற்றுமையுடன் தாய்நாட்டின் வெற்றிக்காக செய்த இந்த அர்ப்பணிப்பு, ஏனைய துறைகளிலும் அடுத்த தலைமுறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளதாகவும் ரணில் வாழ்த்து கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்