< Back
கிரிக்கெட்
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பெண்கள் தினத்தையொட்டி இன்று டிக்கெட் இலவசம்..!
கிரிக்கெட்

பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பெண்கள் தினத்தையொட்டி இன்று டிக்கெட் இலவசம்..!

தினத்தந்தி
|
8 March 2023 4:12 AM IST

பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் பெண்கள் தினத்தையொட்டி இன்று டிக்கெட் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில், இன்றிரவு 7.30 மணிக்கு குஜராத் ஜெயன்ட்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மும்பை பிரபோர்ன் மைதானத்தில் மோதுகின்றன. தங்களது முதல் இரு ஆட்டங்களில் தோல்வியை தழுவிய இவ்விரு அணிகளும் முதல் வெற்றியை குறி வைத்து களம் இறங்குகின்றன.

இன்று சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுவதையொட்டி இன்றைய ஆட்டத்தை நேரில் பார்க்க அனைவருக்கும் டிக்கெட் இலவசம் என்று பிரிமீயர் லீக் நிர்வாகம் அறிவித்துள்ளது. பெண்கள் ஏற்கனவே இலவசமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆண்கள் மட்டும் ரூ.100-க்கு டிக்கெட் வாங்கி பார்த்து வந்தனர். அவர்களும் இன்றைய ஆட்டத்தை கட்டணமின்றி ரசிக்க உள்ளனர்.

மேலும் செய்திகள்