< Back
கிரிக்கெட்
பிரசித் கிருஷ்ணா, தாக்கூருக்கு பதிலாக...இந்திய அணியில் இந்த இளம் வேகப்பந்து வீச்சாளரை எடுத்திருக்க வேண்டும் - சல்மான் பட்

image courtesy; AFP

கிரிக்கெட்

பிரசித் கிருஷ்ணா, தாக்கூருக்கு பதிலாக...இந்திய அணியில் இந்த இளம் வேகப்பந்து வீச்சாளரை எடுத்திருக்க வேண்டும் - சல்மான் பட்

தினத்தந்தி
|
1 Jan 2024 1:39 AM IST

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

கராச்சி,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் பெரும் சரிவை சந்தித்தது.

இந்நிலையில் பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் போன்ற பவுலர்களுக்கு பதிலாக இருபுறங்களிலும் ஸ்விங் செய்யக்கூடிய இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷிதீப் சிங் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தால் இந்தியாவுக்காக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இந்த தொடரில் இந்தியா தங்களுடைய அணியில் பிரசித் கிருஷ்ணா மற்றும் தாக்கூருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங்கை தேர்வு செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். 135 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசக்கூடிய அவரால் பந்தை இருபுறமும் ஸ்விங் செய்ய முடியும்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர். பிரசித் கிருஷ்ணா மற்றும் தாக்கூர் ஆகியோர் எளிதாக நிறைய பவுண்டரிகளை கொடுக்கின்றனர். அந்த இருவருமே பேட்ஸ்மேனுக்கு சவால் கொடுப்பது போல் பந்து வீசவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்