< Back
கிரிக்கெட்
147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை நிகழ்த்திய ஆலி போப்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை நிகழ்த்திய ஆலி போப்

தினத்தந்தி
|
7 Sept 2024 1:10 PM IST

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆலி போப் 103 ரன் அடித்து களத்தில் உள்ளார்.

லண்டன்,

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று 2-0 என தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இலங்கை முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 44.1 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 221 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் லாரன்ஸ் 5 ரன், டக்கட் 86 ரன், ஜோ ரூட் 13 ரன் எடுத்து அவுட் ஆகினர். ஆலி போப் 103 ரன்னுடனும், ஹாரி புரூக் 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இலக்கை தரப்பில் லஹிரு குமாரா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ஆலி போப் சதம் அடித்ததன் மூலம் 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத புதிய வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அதாவது ஆலி போப் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 7 சதங்கள் அடித்துள்ளார். இதில் ஆச்சரியமளிக்கும் விசயம் என்னவென்றால் இந்த ஏழு சதங்களும் வெவ்வேறு அணிகளுக்கு எதிராக அடித்தவை ஆகும். இதன் மூலம், தனது டெஸ்ட் கெரியரின் முதல் ஏழு சதங்களையும் வெவ்வேறு அணிகளுக்கு எதிராக அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

ஆலி போப் அடித்த டெஸ்ட் சதங்கள்;

135 ரன் - தென் ஆப்பிரிக்கா - 2020

145 ரன் - நியூசிலாந்து - 2022

108 ரன் - பாகிஸ்தான் - 2022

205 ரன் - அயர்லாந்து - 2023

196 ரன் - இந்தியா - 2024

121 ரன் - வெஸ்ட் இண்டீஸ் - 2024

103 ரன் * - இலங்கை - 2024

மேலும் செய்திகள்