< Back
கிரிக்கெட்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்கள் மீது போலீசில் புகார்... என்ன நடந்தது..?
கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்கள் மீது போலீசில் புகார்... என்ன நடந்தது..?

தினத்தந்தி
|
16 July 2024 6:41 AM IST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுடெல்லி,

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான அவரும், சக வீரர்கள் யுவராஜ்சிங், சுரேஷ் ரெய்னாவும் குனிந்து கால்களை பிடித்தபடி ஆடிய நடனமும், உடல் அசைவுகளும் மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்யும் வகையில் இருப்பதாக சர்ச்சை கிளப்பி இருக்கிறது.

மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பை நடத்தி வரும் அர்மான் அலி என்பவர் டெல்லி போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து டெல்லி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

இதற்கிடையே அந்த வீடியோவை நீக்கிய ஹர்பன்சிங் தனது எக்ஸ் பதிவில், 'யாருடையை மனதை புண்படுத்தும் நோக்கில் அந்த வீடியோவை வெளியிடவில்லை. நாங்கள் ஒவ்வொரு தனிநபர் மற்றும் சமூகத்தை மதிக்கிறோம். மூத்தோர் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பில் தொடர்ந்து 15 நாட்கள் விளையாடியதால் எங்களது உடல்நிலை எந்த அளவுக்கு சோர்ந்து போயிருக்கும் என்பதை பிரதிபலிக்கும் வகையிலேயே இந்த வீடியோவை வெளியிட்டோம். இதனால் யாருடைய மனதையும் காயப்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்' என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்