< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
பிரதமர் மோடிக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக அளித்த கெய்க்வாட்..!
|11 Oct 2023 1:58 PM IST
ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற வீரர்கள் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட்டை பிரதமர் மோடிக்கு கெய்க்வாட் பரிசளித்தார்.
புதுடெல்லி,
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா முதன் முறையாக 28 தங்கம் உட்பட 107 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தது.
இந்நிலையில், பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஆசிய விளையாட்டில் இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கிய கெய்க்வாட் தங்கம் வென்ற வீரர்கள் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட்டை பிரதமர் மோடிக்கு பரிசளித்தார்.