ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருது: பெயர்களை பரிந்துரைத்த ஐசிசி...!
|சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. இந்நிலையில் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்துள்ளது.
அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரரை தேர்வு செய்ய 3 வீரர்களின் பெயர்களை ஐசிசி பரிந்துரை செய்துள்ளது. அதில் பாகிஸ்தானின் பக்கார் ஜமான், இலங்கையின் பிரபாத் ஜெயசூர்யா, நியூசிலாந்தின் மார்க் சாம்ப்மென் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
இதேபோல் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு நருமோல் சாய்வாய் (தாய்லாந்து), கவிஷா எகொடகே (யுஏஇ),கெலிஸ் நத்லோவ் (ஜிம்பாப்வே) ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
இவர்களில் அதிக வாக்குகள் பெறும் வீரர் மற்றும் வீராங்கனைக்கு ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருது வழங்கப்படும்.