< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகல்..?

image courtest: twitter/@ChennaiIPL

கிரிக்கெட்

ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகல்..?

தினத்தந்தி
|
5 May 2024 4:34 PM IST

காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.

சென்னை,

இந்தியாவில் நடைபெற்று வரும் 17-வது ஐ.பி.எல் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய முதல் 10 போட்டிகளில் 5 வெற்றியும், 5 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. .

அந்த அணிக்கு இலங்கையை சேர்ந்த இளம் வீரர் மதிஷா பதிரனா வேகப்பந்து வீச்சு துறையில் நம்பிக்கை அளித்து வந்தார். நடப்பு சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதனிடையே காயம் காரணமாக சில போட்டிகளை தவறவிட்ட அவர், சென்னை அணிக்கு கடைசியாக நடைபெற்ற பஞ்சாப்புக்கு எதிரான போட்டியிலும் களமிறங்கவில்லை.

இந்நிலையில் தொடை தசையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள இலங்கை திரும்பி உள்ளார். இதனால் இவர் நடப்பு சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்