ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க சென்னை புறப்பட்டார் பதிரனா
|10 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் நேற்று சென்னையில் தொடங்கியது.
சென்னை,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் நேற்று சென்னையில் தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த தொடரில் சென்னை அணியில் இடம் பெற்றிருந்த இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனா வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியின் போதுகிரேட் ஒன் தசைப்பிடிப்பு காயத்தை சந்தித்ததால் அவரும் ஐ.பி.எல் தொடரின் தொடக்க ஆட்டங்களை தவறவிடுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அவருடைய மேனேஜர் அமிலா கலுகலேகே தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் பதிரனா எங்கே என்ற கேள்விக்கு பதில் இது தான். பிட்டாகியுள்ள அவர் இடியைப் போன்ற பந்துகளை வீசுவதற்கு தயாராகியுள்ளார். அவரை எதிர்கொள்ள தயாராக இருங்கள். ஒரு வழியாக நாங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டோம் என அவருடன் எடுத்த புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.
இதன் காரணமாக பதிரனா எப்போது வேண்டுமானாலும் சென்னை அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பதற்காக பதிரனா சென்னைக்கு புறப்பட்டுள்ளார். இதை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் தெரிவித்துள்ளார். இதனால் சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.