< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு...!
|16 Aug 2023 1:36 PM IST
பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
லாகூர்,
பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ். இவருக்கு வயது 38. இவர் பாகிஸ்தான் அணிக்காக கடந்த 2008ம் ஆண்டு ஜிம்பாப்வே-க்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார்.
வஹாப் ரியாஸ் இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 83 விக்கெட்டுகளும், 91 ஒருநாள் போட்டிகளில் ஆடி 120 விக்கெட்டுகளும், 36 டி20 போட்டிகளில் ஆடி 34 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
இளம் வீரர்களின் வருகையால் கடந்த 2020ம் ஆண்டுக்கு பின்னர் பாகிஸ்தான் அணியில் இடம் பெறாத வஹாப் ரியாஸ் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் சமயத்தில் வஹாப் ஓய்வை அறிவித்துள்ளதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.