< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஓய்வு முடிவை திரும்ப பெறும் பாகிஸ்தான் முன்னணி வீரர்
|24 March 2024 8:26 AM IST
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான இமாத் வாசிம் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார்.
கராச்சி,
பாகிஸ்தான் கிரிக்கெட் ஆல்-ரவுண்டர் 35 வயது இமாத் வாசிம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார். இந்த நிலையில் அவர் தனது ஓய்வு முடிவை திரும்ப பெறுவதாக எக்ஸ் சமூக வலைதளம் மூலமாக நேற்று அறிவித்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதை அடுத்து அவர் தனது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்துள்ளார். ஜூன் மாதம் நடைபெறும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் பயிற்சி முகாமுக்கு அவர் அழைக்கப்படுவார் என்று தெரிகிறது.