< Back
கிரிக்கெட்
இந்திய டெஸ்ட் அணியில் சர்பராஸ் கான்...வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் வீரர்

கோப்புப்படம்

கிரிக்கெட்

இந்திய டெஸ்ட் அணியில் சர்பராஸ் கான்...வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் வீரர்

தினத்தந்தி
|
30 Jan 2024 11:02 AM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

கராச்சி,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி, வரும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 2-ம் தேதி) நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி வீரர்களான ஜடேஜா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.

ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டத்தின்போது ஜடேஜாவுக்கு தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது. அதேவேளையில் கே.எல். ராகுலுக்கு தசைநாரில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் 2-வது போட்டியிலிருந்து விலகியுள்ளனர். இருவரின் காயத்தன்மையின் முன்னேற்றத்தை பிசிசிஐ மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது.

இவர்களுக்கு பதிலாக சர்பராஸ் கான், சவுரப் குமார், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய அணியில் இடம் பிடித்துள்ள சர்பராஸ் கானுக்கு பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, வாழ்த்துகள் சகோதரா உங்களுக்காக மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்