< Back
கிரிக்கெட்
உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியின் புதிய ஜெர்சி வெளியீடு
கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியின் புதிய ஜெர்சி வெளியீடு

தினத்தந்தி
|
29 Aug 2023 9:09 AM IST

உலகக்கோப்பைத் தொடருக்கான பாகிஸ்தான் அணியின் ஜெர்சியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது

இஸ்லாமாபாத்,


இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகின்றன.

கடந்த 10 ஆண்டுகளாக எந்த வித ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அணிகளும் உலகக்கோப்பை தொடருக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் , உலகக்கோப்பைத் தொடருக்கான பாகிஸ்தான் அணி அணியின் ஜெர்சியை வெளியிட்டுள்ளது. ஜெர்சியில் உலகக்கோப்பையின் படமும் , ஐசிசி ஆண்கள் உலகக்கோப்பை இந்தியா 2023 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் நாட்டுக் கொடியும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய இலச்சினையும் இடம் பெற்றுள்ளது.


மேலும் செய்திகள்