< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியின் புதிய ஜெர்சி வெளியீடு
|7 May 2024 6:01 PM IST
20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி தொடங்குகிறது.
கராச்சி,
20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த தொடரை முன்னிட்டு அனைத்து அணிகளும் டி20 உலகக்கோப்பைக்கான தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன.
ஏ பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தானும் இதே பிரிவில் இருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஜூன் 9-ந் தேதி நியூயார்க்கில் மோதுகின்றன. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சி நேற்று வெளியிடப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் அணியும் டி20 தொடருக்கான புதிய ஜெர்சியை வெளியிட்டுள்ளது.