< Back
கிரிக்கெட்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசளித்த பாகிஸ்தான் அணியினர்..!

image courtesty; twitter/ @TheRealPCB

கிரிக்கெட்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசளித்த பாகிஸ்தான் அணியினர்..!

தினத்தந்தி
|
25 Dec 2023 5:29 PM IST

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

பெர்த்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி 'பாக்சிங் டே' என்று அழைக்கப்படுகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் அணியினர், கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பரிசு மற்றும் இனிப்பு வழங்கினர். மேலும் ஆஸ்திரேலிய வீரர்களின் குழந்தைகளுக்கு இனிப்பு கொடுத்து மகிழ்ந்தனர். இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் வீடியோவாக பதிவிட்டிருந்தது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்