நியூசிலாந்து டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு..!
|காயம் காரணமாக ஷதாப் கான் அணியில் இடம்பெறவில்லை.
கராச்சி,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஜனவரியில் நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான 17 வீரர்கள் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர் அசாமுக்கு பின் பாகிஸ்தான் டி20 அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ஷாஹீன் அப்ரிடியின் பயணம் இந்த தொடரிலிருந்து தொடங்க உள்ளது. காயம் காரணமாக ஷதாப் கான் அணியில் இடம்பெறவில்லை.
பாகிஸ்தான் அணி விவரம் பின்வருமாறு;-
ஷாஹீன் அப்ரிடி (கேப்டன்), பாபர் அசாம், முகமது ரிஸ்வான், பகர் ஜமான், சைம் அயூப், சாஹிப்சாதா பர்ஹான், ஹசீபுல்லா கான், இப்திகார் அகமது, அசம் கான், அமீர் ஜமால், அப்பாஸ் அப்ரிடி, முகமது வாசிம் ஜூனியர், முகமது நவாஸ், அப்ரார் அஹ்மத் , முகமது நவாஸ் மீர், ஹாரிஸ் ரவூப், ஜமான் கான்.