< Back
கிரிக்கெட்
பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரின் விநோத ஆக்சன்... இணையத்தில் வைரல்...ரசிகர்கள் விமர்சனம்
கிரிக்கெட்

பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரின் விநோத ஆக்சன்... இணையத்தில் வைரல்...ரசிகர்கள் விமர்சனம்

தினத்தந்தி
|
3 March 2024 9:51 AM IST

பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரான உஸ்மான் தாரிக்கின் விநோத ஆக்சன் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கராச்சி,

பாகிஸ்தானில் உள்ளூர் டி20 தொடரான பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்) நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் - கராச்சி கிங்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான உஸ்மான் தாரிக்கின் பந்து வீசும் ஆக்சன் பேசும் பொருளாகியுள்ளது. இந்த ஆட்டத்தில் 7-வது ஓவரை வீசிய அவர், அதில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இவரது ஆக்சன் பந்து வீச ஓடி வந்து, திடீரென நின்று பேட்ஸ்மேனை பார்த்து குறிவைத்து வீசுவதுபோல் உள்ளது. இதனை சரியாக கணிக்க முடியாத பேட்ஸ்மேன்கள் எல்.பி.டபூள்யூ. முறையில் ஆட்டமிழந்தனர். இவரது விநோத ஆக்சன் இணையத்தில் வைரலான நிலையில் ரசிகர்கள் இது முறையானது இல்லை என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்