< Back
கிரிக்கெட்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் விமர்சனம்; பதில் அளித்த ஐசிசி..!
கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் விமர்சனம்; பதில் அளித்த ஐசிசி..!

தினத்தந்தி
|
17 Oct 2023 11:43 AM IST

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் ஐசிசி நிகழ்வுபோல் இல்லாமல் பிசிசிஐ நிகழ்வு போன்றிருந்தது என பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் விமர்சித்திருந்தார்.

துபாய்,

10 அணிகள் கலந்து கொண்ட 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் இயக்குனர் மிக்கி ஆர்தர், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் ஐசிசி நிகழ்வுபோல் இல்லாமல் பிசிசிஐ நிகழ்வு போன்றிருந்தது என்று விமர்சித்திருந்தார்.

அவரது இந்த கருத்திற்கு பதிலளித்த ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே,

நாங்கள் நடத்தும் எல்லா நிகழ்வுக்கும் வெவ்வேறு தரப்புகளில் இருந்து விமர்சனங்கள் எழும். அதை கவனத்துடன் கையாள்வோம். இந்த தொடர் தற்போது தொடக்க நிலையில் மட்டுமே உள்ளது. அதனால் இது எப்படி செல்கிறது என்பதை பார்ப்போம். அதனடிப்படையில் என்ன மாற்றம் செய்யலாம், எதனை சிறப்பாக செய்யலாம், உலகக்கோப்பை தொடர் சார்ந்த மேம்பாடு போன்றவற்றை மதிப்பாய்வு செய்வோம். அதே நேரத்தில் தொடரின் முடிவில் இது சிறப்பானதொரு உலகக்கோப்பை தொடராக இருக்கும் என நம்புகிறேன்" என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்