< Back
கிரிக்கெட்
மைதானங்களை மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை - கம்ரன் அக்மல் கண்டனம்

Image Courtesy : AFP

கிரிக்கெட்

மைதானங்களை மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை - கம்ரன் அக்மல் கண்டனம்

தினத்தந்தி
|
29 Jun 2023 6:10 AM IST

பாகிஸ்தானின் கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிராகரித்தது சரியான முடிவு என்று கம்ரன் அக்மல் தெரிவித்துள்ளார்.

லாகூர்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கம்ரன் அக்மல் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

"உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையில் ஆஸ்திரேலியா ( பெங்களூரு) மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக (சென்னை சேப்பாக்கம்) தாங்கள் விளையாடும் இடங்களை மாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்தது. இதே போல் இந்தியாவுக்கு எதிராக ஆமதாபாத்திலும் விளையாட விரும்பவில்லை.

ஆனால் பாகிஸ்தானின் கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிராகரித்தது சரியான முடிவாகும். இது போன்ற வேண்டுகோளை பாகிஸ்தான் வைத்திருந்தால் அது முற்றிலும் தவறானது. ஐ.சி.சி. தொடர்களில் எங்கு எந்தெந்த ஆட்டங்கள் நடைபெற வேண்டும் என்பதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முடிவு செய்கிறது. போட்டிக்குரிய மைதானங்களை மாற்ற ஐ.சி.சி. ஒப்புக் கொண்டால், மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இதே போன்றுகேட்க தொடங்கி விடுவார்கள். இது போன்ற மாற்றங்களை கேட்பது முட்டாள்தனமானது."

இவ்வாறு கம்ரன் அக்மல் கூறினார்.

மேலும் செய்திகள்