< Back
கிரிக்கெட்
ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்ட சம்பவம்... ஐ.சி.சி.யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார்
கிரிக்கெட்

'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கமிட்ட சம்பவம்... ஐ.சி.சி.யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார்

தினத்தந்தி
|
17 Oct 2023 10:09 PM IST

ஆமதாபாத்தில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட்ட சம்பவம் தொடர்பாக ஐ.சி.சி.யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது.

இஸ்லாமாபாத்,

ஆமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் வீரர்களை நோக்கி இந்திய ரசிகர்கள் சிலர் 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கமிட்ட விவகாரம் விமர்சனத்திற்குள்ளானது. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஐ.சி.சி.யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் ஊடகவியலாளர்களுக்கு விசா வழங்கப்படாதது தொடர்பாகவும் ஐ.சி.சி.யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்