< Back
கிரிக்கெட்
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: நெதர்லாந்து அணி போராடி தோல்வி

Image Tweeted By @ICC

கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: நெதர்லாந்து அணி போராடி தோல்வி

தினத்தந்தி
|
16 Aug 2022 11:36 PM IST

16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ரொட்டர்டாம்,

நெதர்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. ரொட்டர்டாம் நகரில் இன்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர் இமாம் உல் ஹக், 19 பந்துகளை எதிர்கொண்டு 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஃபக்கர் சமான் மற்றும் கேப்டன் பாபர் அசாம் ஆகியோர் இணைந்து அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர்.

பாபர் அசாம் 74 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் பக்கர் சமான், சதம் விளாசினர். இறுதியில் பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் எடுத்தது. 317 என்ற இமாலய இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது.

அந்த அணியின் தொடக்க வீரர் விக்ரம்ஜித் சிங் சிறப்பாக விளையாடி 65 ரன்கள் குவித்தார். மற்ற தொடக்க மற்றும் நடுவரிசை வீரர்கள் சோபிக்கவில்லை. இருப்பினும் பின்னர் ஜோடி சேர்ந்த டாம் கூப்பர் மற்றும் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் ஜோடி சிறப்பாக விளையாடினர்.

டாம் கூப்பர் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்தது. இறுதியில் நெதர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் அடித்து போராடி தோல்வி அடைந்தது. கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 71 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

மேலும் செய்திகள்