ஆசிய கோப்பை தொடர்; சூப்பர்-4 சுற்றில் பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்...!
|ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன.
லாகூர்,
6 அணிகள் கலந்து கொண்ட ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்ட 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டன. இதில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஒரு பிரிவிலும், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஒரு பிரிவிலும் இடம் பெற்றன.
இந்த அணிகள் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். அந்த வகையில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடித்த பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்காளதேசம் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின.
இதையடுத்து ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இன்று நடைபெறும் முதலாவது சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் பாகிஸ்தானின் லாகூர் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.