< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஆப்கான் வீரரை பாக். வீரர் பேட்டால் அடிக்க முயன்ற சம்பவம்- அதிரடி காட்டிய ஐசிசி
|9 Sept 2022 11:15 AM IST
மோதலில் ஈடுபட முயன்ற பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
துபாய்,
ஆசிய கோப்பை தொடரில் மோதலில் ஈடுபட முயன்ற பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆசியகோப்பை தொடரின் சூப்பர் ஃபோர் லீக் சுற்றில், ஆப்கானிஸ்தான் வீரர் ஃபரீத் அகமதுவை, பாகிஸ்தான் அணி வீரர் ஆசிப் அலி, பேட்டால் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, இருவருக்கும் போட்டி கட்டணத்தில் இருந்து தலா 25 சதவீதம் தொகையை அபராதமாக விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.