பாக். கேப்டன் பாபர் அசாமின் வாட்ஸ்-அப் உரையாடல்கள் லீக்கான விவகாரம்: அப்ரிடி கண்டனம்
|பாபர் அசாமும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகியும் தனிப்பட்ட முறையில் பேசிய வாட்ஸ்-அப் உரையாடல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கராச்சி,
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகியும் தனிப்பட்ட முறையில் பேசிய வாட்ஸ்-அப் உரையாடல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகா அஸ்ரப் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
ஜகா அஷ்ரப் மற்றும் பாபர் அசாம் இடையே என்ன நடந்தது என்பது தனிப்பட்ட விஷயம் என்றாலும், பாகிஸ்தான் கேப்டனின் தனிப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்கள் ஊடகங்களில் கசிந்ததைக் கண்டு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஷாகித் அப்ரிடி கோபமடைந்தார்.
இது தொடர்பாக அஸ்ரபை விமர்சித்து அப்ரிடி கூறியதாவது;
"இது வெட்கக்கேடான நடவடிக்கை. நம் தேசத்தை நாமே களங்கப்படுத்துகிறோம். நமது வீரர்களை நாமே களங்கப்படுத்துகிறோம். ஒருவரின் தனிப்பட்ட செய்திகளை எப்படி கசியவிடுவீர்கள், அதுவும் கேப்டன் பாபர் அசாம்?
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் தனது வேலையை மட்டும் சரியாக பார்க்க வேண்டும். தலைமைப் பொறுப்புக்கு ஏற்றபடி நடந்துகொள்ள வேண்டும்" என அப்ரிடி கூறியுள்ளார்.