< Back
கிரிக்கெட்
எங்கள் அணிக்கு தற்போது வேகப்பந்து வீச்சாளர் தேவை - குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா

Image Courtesy: Gujarat Titans Twitter 

கிரிக்கெட்

எங்கள் அணிக்கு தற்போது வேகப்பந்து வீச்சாளர் தேவை - குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா

தினத்தந்தி
|
10 Dec 2022 8:28 AM IST

குஜராத் அணி வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசனை கொல்கத்தா அணிக்கு பரஸ்பர அடிப்படையில் பரிமாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது.

மும்பை,

ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை தேர்ந்தெடுக்க அனைத்து அணிகளும் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த ஏலத்திற்கு முன்பாக பரஸ்பர பரிமாற்றம் அடிப்படையில் குஜராத் அணி வேகப்பந்துவீச்சாளர் லாக்கி பெர்குசன், அதிரடி ஆட்டக்காரர் குர்ப்ராஸ் ஆகியோரரை கொல்கத்தா அணிக்கு கொடுத்தது.

இதையடுத்து அந்த அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் தேவை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா அளித்த பேட்டியில் கூறியதாவது,

நீங்கள் கோப்பையை வென்றாலும் அணியில் சில மாற்றங்களை தேவைக்கு ஏற்ப செய்ய வேண்டும். எங்களது அணிக்கு தற்போது சிறந்த வேகப்பந்து வீச்சாளர் தேவை . சிறிய ஏலத்தில் அணிக்கு தேவையான மாற்றங்களை மேற்கொள்ள அனைத்து அணிகளும் முயல்வர். அதையே தான் நாங்களும் செய்யப் போகிறோம்.

எங்கள் அணியில் நிறைய வீரர்களை நாங்கள் வெளியிடாததால் எங்களுக்கு நிறைய வீரர்களை தேர்வு செய்ய தேவை இல்லை. உள்நாட்டு வீரர்களின் இடம் 2 முதல் 3 உள்ளது. நீங்கள் விரும்பும் வீரரை உங்கள் அணிக்கு பெறுவீர்கள் என்று இல்லை. ஏனெனில் மேலும் 9 அணிகள் ஏலத்தில் உள்ளனர். அது மிகவும் முக்கியமானது என்றார்.

மேலும், ஒவ்வொரு வருடமும் நீங்கள் ஒரு அணியாக வெற்றி பெற விரும்புகிறீர்கள். இங்கு யாரும் பங்கேற்பதற்காக வரவில்லை, வெற்றி பெற வேண்டும். ஒரு வெற்றியாளர் கண்டிப்பாக இருப்பார். ஆனால், வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வித்தியாசம் மிகக்குறைவு.

குப்ராஸ் ஒரு நல்ல வீரர், ஆனால் அவர் மற்றொரு அணிக்கு சென்றுள்ளார். சர்வதேச அணியில் டி20 கேப்டன்களாக இருக்கும் பலர் ஐபிஎல்லில் தேர்வாகவில்லை என்றார். நாங்கள் ஒருமுறை மட்டுமே இறுதிப்போட்டியில் விளையாடி உள்ளோம், ஆனால் 1 லட்சம் ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு அளித்தனர், அது உங்களுக்கு உதவும் என்றார்.

கடந்த ஐபிஎல்லில் அறிமுகமான குஜராத் அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்பட்டு சாம்பியன் பட்டம் வென்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்