< Back
கிரிக்கெட்
என்னுடைய ஐபிஎல் சாதனையை இந்த ஒரு இந்திய வீரரால் மட்டுமே முறியடிக்க முடியும் :  கிறிஸ் கெயில்
கிரிக்கெட்

'என்னுடைய ஐபிஎல் சாதனையை இந்த ஒரு இந்திய வீரரால் மட்டுமே முறியடிக்க முடியும்' : கிறிஸ் கெயில்

தினத்தந்தி
|
19 March 2023 6:58 PM IST

தனது அதிரடி ஆட்டத்தால் ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர் கிறிஸ் கெயில்

மும்பை,

வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கெயில். வெளிநாட்டு வீரராக இருந்தாலும் இவருடைய ஐபிஎல் ஆட்டத்திற்கு இந்தியாவில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். பெங்களூரு அணிக்காக பல வருடங்களாக தொடக்க வீரராக சிறப்பாக விளையாடி வந்த இவர் அதன்பின் சில ஆண்டுகளாக பஞ்சாப் அணிக்காக விளையாடினார். ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இவர் எண்ணற்ற சாதனைகளை படைத்திருக்கிறார்.

தனது அதிரடி ஆட்டத்தால் ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர் ..2013-ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்.சி.பி. அணியில் இருந்த கிறிஸ் கெயில் 66 பந்துகளில்175 ரன்களை குவித்தார்.இந்த சாதனை சுமார் 10 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் உள்ளது. டி20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார்

இந்த நிலையில் இந்த சாதனையை முறியடிக்க யாரால் முடியும்? என்று கேட்டதற்கு இந்திய அணியின் கே.எல்.ராகுல் தான் முறியடிப்பார் என கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார் .

இது குறித்து பேட்டி அளித்த அவர் கூறியதாவது ,

ஐபிஎல் தொடரில் 175 ரன் என்ற தனிநபர் அதிகபட்ச சாதனையை கே.எல்.ராகுல்தான் முறியடிப்பார் என்று நினைக்கிறேன். அந்தப் பெரிய ஸ்கோரை தம்மால் அடிக்க முடியும் என அவர் நம்புவார் என்று நான் நினைக்கவில்லை.பெரும்பாலான சமயங்களில் இல்லையென்றாலும் சில நேரங்களில் கேஎல் ராகுல் அது போல பேட்டிங் செய்ய முடிவெடுத்து விட்டால் அதை அவரால் நிச்சயம் நெருங்க முடியும்". என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்