< Back
கிரிக்கெட்
கம்பீர் மாதிரி ஒருவரால்தான் எங்களது அணியை காப்பாற்ற முடியும் - பாக்.முன்னாள் வீரர்
கிரிக்கெட்

கம்பீர் மாதிரி ஒருவரால்தான் எங்களது அணியை காப்பாற்ற முடியும் - பாக்.முன்னாள் வீரர்

தினத்தந்தி
|
7 Sept 2024 7:42 PM IST

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீப காலங்களாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

லாகூர்,

பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற வங்காளதேசம், பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து வரலாறு படைத்தது.

ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் அணி மோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் வேளையில் தற்போது வங்காளதேச அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோல்வியை தழுவியது அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவி லீக் சுற்றோடு வெளியேறிய அந்த அணி, டி20 உலகக்கோப்பையிலும் அமெரிக்க அணியிடம் தோல்விகண்டு வெளியேறியது. இதனால் அந்த அணியின் செயல்பாடுகள் பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளன.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியை வலுப்படுத்த கம்பீர் மாதிரி ஒருவர் தேவை என்று அந்த அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "எல்லாம் ஒரு பொருட்டுக்காகவே பாகிஸ்தான் கிரிக்கெட்டில் செய்யப்படுகிறது. அதுதான் புதிய கேப்டனை உருவாக்குகிறேன் என்றும், கேப்டனை மாற்றுகிறேன் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு சென்று கொண்டிருக்கிறது. இது எப்பொழுதும் நல்ல பலனை தராது. நீங்கள் உங்களுடைய நிரந்தர கேப்டனுடன் இருக்க வேண்டும். நீங்கள் ஒரு கேப்டனை உருவாக்கி அவரை ஒரு வருடம் சுதந்திரமாக விட்டு கேள்விகள் கேட்க வேண்டும். ஆனால் நீங்கள் அப்படியான எந்த கடினமான முடிவையும் எடுக்க மாட்டீர்கள். நீங்கள் ஒரு வருடத்திற்கு பிறகு கேள்வியும் கேட்பதில்லை, சிறப்பான செயல்பாடு இல்லை என்றால் சரியான முடிவையும் எடுப்பதில்லை.

2024 இந்திய அணியை எடுத்துக் கொள்ளுங்கள் அவர்களுடன் சிறப்பாக இணைந்து பணியாற்றிய ராகுல் டிராவிட் இருந்தார். அடுத்த தற்பொழுது கம்பீர் இருக்கிறார். அவர் அற்புதமான வீரர். அவர் எப்பொழுதும் முன் வைத்த காலை பின் வைப்பதே கிடையாது. தற்பொழுது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இப்படி கடினமான முடிவுகளை எடுக்கக்கூடிய உறுதியான நபர் தேவை" என்று கூறினார்.

மேலும் செய்திகள்