சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மா மற்றும் வில்லியம்சன் மட்டுமே படைத்துள்ள தனித்துவ சாதனை
|சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மா மற்றும் வில்லியம்சன் தனித்துவ சாதனை படைத்துள்ளனர்.
பார்படாஸ்,
ஐ.சி.சி. 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
முன்னதாக கடந்த வருடம் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை தொடர்களில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா இரண்டிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியை தழுவியது. அதன்பின் தற்போது டி20 உலகக்கோப்பையை வென்று பெருமை சேர்த்துள்ளது.
மறுமுனையில் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் சீசனிலேயே கோப்பையை வென்று அசத்தியது. அவரின் தலைமையில் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்து அணி 2019 ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2021 டி20 உலகக்கோப்பை தொடர்களில் இறுதிப்போட்டி வரை முன்னேறி அசத்தியது.
இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) கேப்டனாக பங்கேற்றவர்கள் என்ற தனித்துவமான சாதனையை வில்லியம்சன் மற்றும் ரோகித் படைத்துள்ளனர்.