"ஒரு சாமி, இரண்டு சாமி..... ஆறுச்சாமி"- தமிழில் பேசி வீடியோ வெளியிட்ட சி.எஸ்.கே.வீரர் ஷிவம் துபே
|தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘சாமி’ திரைப்படத்தில் வரும் ஒரு வசனத்தை ஷிவம் துபே பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
சென்னை,
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ஷிவம் துபே, நடப்பு சீசனிலும் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்து வருகிறார். சிங்கிள், டபுள் ரன்களை எடுப்பதை காட்டிலும் சிக்சர், பவுண்டரி அடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
முன்னதாக பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளில் விளையாடியுள்ள ஷிவம் துபே அங்கு அந்த அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை. பின்னர் 2022-ம் ஆண்டு ஐ.பி.எல். சீசனில் சி.எஸ்.கே. அணிக்கு வாங்கப்பட்ட அவர் சிறப்பாக செயல்பட்டு அதிரடியில் வெளுத்து வாங்கி வருகிறார். இதனால் ரசிகர்கள் இவரை "ஆறுச்சாமி" என்றே அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் துபே, தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான சாமி திரைப்படத்தில் வரும் " ஒரு சாமி, இரண்டு சாமி....ஆறுச்சாமி" என்ற வசனத்தை தமிழில் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். இதனை சி.எஸ்.கே. தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.