< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஓமன் அணி அறிவிப்பு
கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஓமன் அணி அறிவிப்பு

தினத்தந்தி
|
1 May 2024 9:35 PM IST

டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஓமன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மஸ்கட்,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்தப் போட்டி தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை இன்றைக்குள் (மே 1ம் தேதி) அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அறிவித்துள்ளது.

ஏற்கெனவே நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்க உள்ள ஓமன் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அந்த அணிக்கு அகிப் இலியாஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓமன் அணி விவரம் பின்வருமாறு:-

அகிப் இலியாஸ் (கேப்டன்), ஜீஷன் மக்சூத், காஷ்யப் பிரஜாபதி, பிரதிக் அதவலே, அயன் கான், ஷோயப் கான், முகமது நதீம், நசீம் குஷி, மெஹ்ரான் கான், பிலால் கான், ரபியுல்லா, கலீமுல்லா, பயாஸ் பட், ஷகீல் அகமது.

ரிசர்வ் வீரர்கள்: ஜதீந்தர் சிங், சமய் ஸ்ரீவஸ்தவா, சுப்யான் மெஹ்மூத், ஜேய் ஒடெட்ரா

மேலும் செய்திகள்