< Back
கிரிக்கெட்
உலகக்கோப்பை தொடரில் ஜோப்ரா ஆர்ச்சர்...? - ரசிகர்கள் மகிழ்ச்சி
கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரில் ஜோப்ரா ஆர்ச்சர்...? - ரசிகர்கள் மகிழ்ச்சி

தினத்தந்தி
|
19 Sept 2023 9:53 AM IST

உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியுடன் ஆர்ச்சர் கூடுதல் வீரராக பயணிக்க உள்ளார்.

லண்டன்,

50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் அக்டோபர் 5ம் தேதி இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.

இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது. உலகக்கோப்பை தொடங்க இன்னும் சுமார் 15 நாட்களே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இதில் காயம் காரணமாக ஜோப்ரா ஆர்ச்சர் அணியில் இடம் பெறவில்லை. இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியுடன் ஆர்ச்சர் கூடுதல் வீரராக பயணிக்க உள்ளதாக அந்த அணியின் முன்னாள் வீரரும், தேர்வு குழு தலைவருமான லுக் ரைட் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ்.

கூடுதல் வீரர்: ஜோப்ரா ஆர்ச்சர்

மேலும் செய்திகள்