< Back
கிரிக்கெட்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

image courtesy: ICC

கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

தினத்தந்தி
|
12 Sept 2024 5:44 PM IST

காயத்திலிருந்து குணமடைந்த ரஷித் கான் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

காபூல்,

ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) நடைபெற உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 18-ம் தேதி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற உள்ளது. 3 போட்டிகளும் ஒரே மைதானத்தில் நடைபெற உள்ளன.

இந்நிலையில் இந்த தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹஸ்மத்துல்லா ஷாகிடி தலைமையிலான அந்த அணியில் ரஷித் கான் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணி விவரம் பின்வருமாறு:-

ஹஸ்மத்துல்லா ஷாகிடி (கேப்டன்), ரஹ்மத் ஷா, ரஹ்மானுல்லா குர்பாஸ், இக்ராம் அலிகில், அப்துல் மாலிக், ரியாஸ் ஹசன், தர்வீஷ் ரசூலி, அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, குல்பாடின் நைப், ரஷித் கான், நங்யால் கரோட்டி, அல்லா முகமது கசன்பர், பசல் ஹக் பரூக்கி, பிலால் சாமி, நவீத் ஜத்ரான் மற்றும் பரித் அகமது மாலிக்.

மேலும் செய்திகள்