இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு...!
|இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
காபூல்,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. தொடரில் முதல் ஒருநாள் போட்டி ஜூன் 2ம் தேதியும், 2வது ஒருநாள் போட்டி ஜூன் 4ம் தேதியும், 3வது ஒருநாள் போட்டி ஜூன் 7ம் தேதியும் ஹம்பாந்தோட்டாவில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்த டொடருக்கான 15 பேர் கொண்ட அணியை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு ஹஷ்மத்துல்லா ஷாகிடி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ரஹ்மத் ஷா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாற்று வீரர்களாக 4 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அணி விவரம்: ஹஷ்மத்துல்லா ஷாகிடி (கேப்டன்), ரஹ்மத் ஷா (துணை கேப்டன்), ரஹ்மத்துல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராகிம் ஜட்ரான், ரியாஸ் ஹசன், நஜிபுல்லா ஜட்ரான், முகமது நபி, இக்ராம் அலிகைல் (விக்கெட் கீப்பர்), அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நூர் அமகது, அப்துல் ரஹ்மான், பசல் ஹக் பரூக்கி, பரித் அகமது மாலிக்.
மாற்று வீரர்கள்: குல்பாடின் நைப், ஷாஹிதுல்லா கமால், யாமின் அஹ்மத்சாய், ஜியா உர் ரஹ்மான் அக்பர்.