< Back
கிரிக்கெட்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் நாளை தொடக்கம் - சாதிக்குமா இந்திய இளம் அணி

Image Courtesy: AFP

கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் நாளை தொடக்கம் - சாதிக்குமா இந்திய இளம் அணி

தினத்தந்தி
|
5 Oct 2022 3:55 AM IST

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி நாளை தொடங்குகிறது.

லக்னோ,

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் நடந்து முடிந்த 3 போட்டிகள் டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து ஒருநாள் போட்டிகள் நாளை தொடங்குகிறது.

இந்தியாவி முன்னனி வீரர்கள் டி20 உலக கோப்பையில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்கு செல்ல உள்ளதால் ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அதன் படி இந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி நாளை லக்னோவில் தொடங்குகிறது.

டி20 தொடரை இழந்ததால் ஒருநாள் தொடரை கைப்பற்ற தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்ற கடுமையாக போராடும். அதே வேளையில் இந்திய முன்னணி வீரர்கள் இல்லாததால் அணியில் இடம்பிடித்துள்ள இளம் வீரர்கள் அணியில் தங்களது இடத்தை பிடிக்க தங்களது திறமையை வெளிப்படுத்தி தொடரை வெல்ல கடுமையாக போராடுவர். இந்திய நேரப்படி இந்த ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

மேலும் செய்திகள்