< Back
கிரிக்கெட்
அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்; ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

Image Courtesy: @ACBofficials

கிரிக்கெட்

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்; ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

தினத்தந்தி
|
2 March 2024 12:48 AM IST

இந்த அணியில் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான ரஷீத் கான் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் இடம் பெறவில்லை.

காபூல்,

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை அயர்லாந்து அணி வென்றது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 7ம் தேதி ஷார்ஜாவில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணிக்கு ஹஸ்மத்துல்லா ஷாகிடி கேப்டனாகவும், ரஹ்மத் ஷா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அணியில் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான ரஷீத் கான் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் இடம் பெறவில்லை.

ஆப்கானிஸ்தான் அணி விவரம்; ஹஸ்மத்துல்லா ஷாகிடி (கேப்டன்), ரஹ்மத் ஷா (துணை கேப்டன்), ரஹ்மனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இக்ராம் அலிகில் (விக்கெட் கீப்பர்), இப்ராகிம் ஜட்ரான், ரியாஸ் ஹசன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், முகமது நபி, குல்பைதீன் நைப், நங்யால் கரோட்டி, அல்லா முகமது ஹாசன்பர், நூர் அகமது, பிலால் சமி, பசல் ஹக் பரூக்கி, நவீத் ஜட்ரான், பரீத் அகமது மாலிக்.

ரிசர்வ் வீரர்கள்; ஜியா உர் ரஹ்மான் அக்பர், ஷாஹிதுல்லா கமால், கைஸ் அகமது


மேலும் செய்திகள்