இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்; ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு...!
|இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி ஷாய் ஹோப் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜமைக்கா,
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்-க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. ஒரு டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிரா ஆனது.
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அந்த அணிக்கு ஷாய் ஹோப் கேப்டனாகவும், ரோவ்மன் பவல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஷிம்ரன் ஹெட்மையர் அணிக்கு திரும்பி உள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி:
ஷாய் ஹோப் (கேப்டன்), ரோவ்மன் பவல் (துணை கேப்டன்), அலிக் அத்தானஸ், யானிக் கேரிஷ், கீசி கார்டி, டொமினிக் டிரேக்ஸ், ஷிம்ரன் ஹெட்மையர், அல்ஜாரி ஜோசப், பிரண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடாகேஷ் மோதி, ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியா ஷெப்பர்ட், கெவின் சின்க்ளேர், ஒஷேன் தாமஸ்.