வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடர்; நியூசிலாந்து அணி அறிவிப்பு..!
|வில்லியம்சன், க்ளென் பிலிப்ஸ், டிம் சவுதி ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
வெல்லிங்டன்,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 17ம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு டாம் லாதம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வில்லியம்சன், க்ளென் பிலிப்ஸ், டிம் சவுதி ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி விவரம்:
டாம் லாதம் (கேப்டன்), அதி அசோக் (2-வது மற்றும், 3-வது ஆட்டம்), பின் ஆலென், டாம் பிளன்டெல், மார்க் சாப்மேன், ஜோஷ் கிளார்க்சன், ஜேக்கப் டப்பி, கைல் ஜாமிசன், ஆடம் மில்னே, ஹென்றி நிகோல்ஸ், வில் ஓ ரூர்கி, ரச்சின் ரவீந்திரா, சோதி (முதலாவது ஆட்டம் மட்டும்), வில் யங்.