< Back
கிரிக்கெட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்; இங்கிலாந்தின் கஸ் அட்கின்சன் விலகல் - காரணம் என்ன..?

Image Courtesy: AFP 

கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்; இங்கிலாந்தின் கஸ் அட்கின்சன் விலகல் - காரணம் என்ன..?

தினத்தந்தி
|
10 Sept 2024 11:00 AM IST

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.

லண்டன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த தொடர் நாளை தொடங்குகிறது.

டி20 தொடர் நாளை முதல் 15ம் தேதி வரையும், ஒருநாள் தொடர் வரும் 19ம் தேதி முதல் 29ம் தேதி வரையும் நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் இடம் பெற்றிருந்தார்.

ஆனால் தற்போது அவர் அந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கஸ் அட்கின்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பதிலாக ஆலி ஸ்டோன் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கஸ் அட்கின்சன் 158 ரன்னும், 12 விக்கெட்டும் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும் செய்திகள்