ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை; பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 2ம் இடத்திற்கு முன்னேறிய ரோகித் சர்மா
|சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதல் இடத்தில் பாகிஸ்தானின் பாபர் அசாம் (824 புள்ளி) முதல் இடத்தில் தொடர்கிறார். இந்தியாவின் ரோகித் சர்மா ஒரு இடம் முன்னேறி (765 புள்ளி) 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
சுப்மன் கில் ஒரு இடம் சரிந்து (763 புள்ளி) 3வது இடத்திற்கு வந்துள்ளார். 4வது இடத்தில் விராட் கோலி (746 புள்ளி), அயர்லாந்தின் ஹாரி டெக்டர் (746 புள்ளி) ஆகியோர் உள்ளனர். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 4 இடங்களில் முறையே கேசவ் மஹராஜ் (716 புள்ளி), ஜோஷ் ஹேசில்வுட் (688 புள்ளி), ஆடம் ஜாம்பா (686 புள்ளி), குல்தீப் யாதவ் (665 புள்ளி) ஆகியோர் உள்ளனர்.
ஒருநாள் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் முதல் 3 இடங்களில் முறையே முகமது நபி (320 புள்ளி), ஷகிப் அல் ஹசன் (292 புள்ளி), சிக்கந்தர் ராசா (288 புள்ளி) ஆகியோர் உள்ளனர்.